மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் தொழிலதிபர் மணி முத்தையா. இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில்,2 வது முறையாக மாநில விவசாய அணி துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.வி.எம்.குழுமத் தலைவர், தொழிலதிபர் மணி முத்தையா அவர்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகளும் மாலை மற்றும் கதராடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் மதுரை கிழக்கு மாவட்ட துணை தலைவர்கள்,கோவிந்த மூர்த்தி,முருகேஷ்வரி மற்றும் மாயாண்டி, வாசுதேவன்,தோடனேரி முத்துப்பாண்டி,
தும்மனன்,சந்திரன், ராமதுரை, குமரேசன்,பாலு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
