முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கால் என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ரோட்டரி கிளப் மற்றும் மதுரை தமிழ் சங்க நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கால் இவருக்கு இரண்டு கால்களும் இல்லாத நிலையில் தனது அன்றாட வேலைகளை செய்வதற்கு சிரமப்பட்டு வந்தார் இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட முறை மனு அளித்திருந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படாமல் இருந்தது இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மதுரை அண்ணா பேருந்து நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தவழ்ந்து சென்று மனு அளித்துவிட்டு வந்தார் இதனை அறிந்து கொண்ட மதுரை மாவட்ட ரோட்டரி கிளப் மற்றும் மதுரை தமிழ் சங்கம் சார்பில் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தலைவர் பாலகுரு செயலாளர் பிரேம்குமார் தலைமையில் ரோட்டரி கிளப்பின் நிர்வாகியும் விவசாய சங்க தலைவர் எம் பி ராமன் முன்னிலையில் நோட்டரி சங்க நிர்வாகிஜெகன் கிராம பெரியவர்கள் தவமணி நடராஜன் மாரி அம்மாசி பசும்பொன் ஜெயம் தவசி ஆகியோர் முதலைக்குளம் கிராமத்திற்கு சென்று மாற்றுத்திறனாளி பெண் மாயக்காலிடம் மூன்று சக்கர சைக்கிள் வழங்கி அதை இயக்கும் முறைகளையும் சொல்லிக் கொடுத்தனர் தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி வாழ்வாதாரத்திற்கு உதவிய ரோட்டரி கிளப் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் விவசாய சங்க நிர்வாகிகள் கிராம பெரியவர்களுக்கு மாயக்கால் நன்றி தெரிவித்தார்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!