பாலமேடு அருகே ரூ.3.60 கோடியில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை – எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ராமக்கவுண்டன்பட்டி கிராமத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் சாத்தியார் அணை நீர் வரத்து ஆற்றில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட இயக்குனர் வானதி, செயற்பொறியாளர் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, உதவி செயற்பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், அருண்விஜயன், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், அவை தலைவர் பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி தவசதிஷ், இளைஞரணி சந்தனகருப்பு, பிரதாப் விளையாட்டு. மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாண்டி, முன்னால்பன்னகுடி ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி.கிளை செயலாளர் சுபாஷ் மதுரைவீரன், மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏவுக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.