உசிலம்பட்டியில் கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Oplus_0

உசிலம்பட்டியில் கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில் அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளுக்கு எதிரான அரசானையை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*

தமிழக அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளை சமூக நீதி பள்ளி மற்றும் விடுதிகள் என பெயர் மாற்றம் செய்து வருகின்ற சூழலில் தேனி,திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற சூழலில்

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளுக்கு எதிரான அரசானைகள் 40/24,2/25 ஐ ரத்து செய்யக் கோரியும், பிரமலைக்கள்ளரிடம் பறிக்கப்பட்டு உரிமைகளை மீட்கவும் பிரமலைக் கள்ளர்களின் வரலாற்றையும் இன அழிப்பையும் பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது வருகிறது.,

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளை சமூக நீதி பள்ளிகள் மற்றும் விடுதிகள் என பெயர் மாற்றம் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., முன்னதாக உசிலம்பட்டி தேவர் சிலையில் இருந்து தேனி ரோட்டில் உள்ள முருகன் கோவில் வரை ஊர்வலமாக வந்தனர்.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!