மதுரை மாவட்டம் சோழவந்தான் மின்சாரம் வாரியம் அருகில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நந்தி பகவான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. பிரசாத் சர்மா சிவாச்சாரியார் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினார். தொடர்ந்து புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அம்பாள் சொக்கநாதர், நந்தி பகவான் ஆகியோருக்கு பால் தயிர் வெண்ணை நெய் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பூசாரி வீராச்சாமி தீபாராதனை காட்டினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. காத்த முத்து குருநாதர் தலைமையில் குழுவினர் பஜனை பாடல்களைப் பாடினர். இதில் வேல்முருகன் சாரீஸ் சின்னபாண்டி விஜயலட்சுமி, மற்றும் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
