உசிலம்பட்டி கிராம பகுதிகளில் தொடர்ந்து கோயிலை உடைத்து உண்டியல் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். உசிலம்பட்டி தாலுகா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதியில் உள்ள ஆரியபட்டி கற்குவேல் அய்யனார் கோவில், கல்யாண கருப்பு கோவில் உண்டியல், குப்பணம் பட்டி கருப்பு கோவில் மணிகள் என கடந்த சில தினங்களாக உசிலம்பட்டி பகுதியில் கோவிலின் உண்டியல் மற்றும் கோவில் மணிகள் திருடப்பட்டது. இது திருட்டு சம்பந்தமாக கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி சந்திரசேகர் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பாக உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியைச் சேர்ந்த ராமர் மகன் அஜய் 19 ,கல்யாணி மகன் ஸ்ரீநாத் 20 ஆகியோர் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் கோவில் உண்டியல் மற்றும் கோவில் மணியை திருடியதாக தெரிவித்தனர். இதன் பேரில் உசிலம்பட்டி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.