அம்மா ஆட்சியை அமைக்க, மீட்டெடுக்க சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் – என செங்கோட்டையன் படத்துடன் உசிலம்பட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு .

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது, நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.,

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் ஒபிஎஸ், சசிக்கலா, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் படங்களுடன் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் “தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம் – சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்” என்ற வாசகத்துடனும் 2026 ல் அம்மா ஆட்சியை மீட்டெடுப்போம் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,

உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான பேரையூர் ரோடு, மதுரை ரோடு, தேனி ரோடு, வத்தலக்குண்டு ரோடு மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.,

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்த சூழலில், செங்கோட்டையன் புகைப்படத்துடன் ஒபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.,

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!