மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் மாயாண்டி கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கழிப்பறை நீண்ட நாட்களாக சேதமடைந்து விஷ பூச்சிகள் தங்கும் இடமாக இருந்து வந்தது. இதை இந்தப் பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் பயன்படுத்தப்படாத கழிப்பறை கட்டடத்தை அப்புறப்படுத்தவில்லை.இந்த நிலையில்கடந்த வாரம் கழிப்பறை கட்டிடம்இடிந்து கழிவுநீர் சாக்கடையில் விழுந்துவிட்டது.இதன் பின்னரும் ஊராட்சி நிர்வாகம் ஏனோ இதை அப்புறப்படுத்தவில்லை நேற்று பெய்த கனமழையில் கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் செல்ல முடியாமல் கழிவுநீர் கலந்த மழை நீர் ஊருக்குள் உள்ளகுடியிருப்பு பகுதியில் புகுந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அதுமட்டுமின்றி அங்கு குடியிருக்கும் குழந்தை முதல் பெண்கள் மற்றும் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மக்கள் பயன்படாத கழிப்பறை இடிந்து விழுந்து கழிவுநீர் வாய்க்கால் கிடைப்பதை அப்புறப்படுத்தி அப்பகுதியில் உள்ள கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் இரும்பாடி மன்னாடிமங்கலம் வைகை பாலம் கட்டும்போது கழிவு நீர் வாய்க்கால் மூடப்பட்டு கிராமத்தில் இருந்து செல்லக்கூடிய கழிவுநீர் செல்லக்கூடிய அளவிற்கு பைப் பதிக்காமல் சிறிய அளவில் பைப் பதித்ததால் இதன் காரணமாகவும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கலந்த மழை நீர் தேங்கியுள்ளது இதன் காரணமாகவும் தொற்றுநோய் பரவுவதாகவும்
கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போடப்பட்டு தற்போது வரை பணிகள் தொடங்கப்படாத நிலையில் இதன் காரணமாகவும் கழிவுநீருடன் மழை நீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயாண்டி கோவில் மற்றும் அதன் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்காதவாறு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
