சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் மதுரை கே கே நகர் லயன் சங்கம் சார்பில் ஆழ்துளை கிணறு மற்றும் ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ராபின்சன்செல்வகுமார் வரவேற்றார். அரிமா சங்க கவர்னர் செல்வம் நிகழ்ச்சிக்கான கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.அரிமா ராஜ்குமார் மற்றும் கவிதா ராஜ்குமார் ஆகியோர் ஆழ்துளை கிணறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயினை மாணவர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். இதை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். மண்டலத்தலைவர் இளங்கோவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேமா செல்லப்பாண்டி, சையத்ஜாபர், சிவகங்கை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் பேசினார்கள். வட்டார தலைவர் முத்துராசு, கே கே நகர் அரிமா சங்க தலைவர் கந்தசாமி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் குருரவி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளியின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் விழாவில் பங்கேற்றனர். ஆசிரியை பிரேம்குமார் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.