

அதிகாரிகள் தோண்டிய பள்ளங்களை சொந்த செலவில் மூடிய பொதுமக்கள்
சோழவந்தான் பேரூராட்சயில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களை இரண்டு வருடங்களாக மூடாத அதிகாரிகள் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து சொந்த செலவில் பள்ளங்களை மூடும் அவலமம.,,
துரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 2 மற்றும்7 வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி நகரில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில். கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக வெங்கடாஜலபதி நகரின் முக்கிய வீதியில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக குழாய் தோண்டும் பணிகள் நடைபெற்றது பணிகள் முடிந்த பின்பு பள்ளங்களை சரிவர மூடாததால் பெருக்கல் அனைத்தும் மேடு பள்ளங்கள் ஆகி பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. . ஏற்கனவே பேவர் பிளாக் பதித்த நிலையில் குழாய் பதிக்க குழி தோண்டியதால் பேவர் பிளாக் கற்களும் உடைந்து காணப்படுகிறது. சுமார் 18 மாதங்களுக்கு முன்பாக தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமலும் முறையாக சரி செய்யப்படாமலும் இருப்பதால். வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து 7வது வார்டு கவுன்சிலர் மற்றும் 2வது வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பேரூராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரும் மழைக்காலங்களிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவ்வப்போது தங்கள் வீடுகளில் முன்பாக உள்ள பள்ளங்களை தங்கள் சொந்த செலவில் சரி செய்து வரும் அவல நிலையும் தொடர்கிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து வெங்கடாஜலபதி நகர் பகுதியில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்ய வேண்டும் பேவர் பிளாக் முறையாக அமைக்க வேண்டும் என்று பகுதி குடியிருப்பு வாசிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ோரிக்கை விடுத்துள்ளனர்
விரைவில் சரி செய்யாவிட்டால் வார்டு பொதுமக்களை ஒன்று திரட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்துள்ளனர்

You must be logged in to post a comment.