மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் பேட்டை 1 மற்றும் 2வது வார்டு பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கின்றனர் அவர்களுக்கான நியாயவிலைக்கடை முதலியார் கோட்டை நடுத்தெரு கோட்டைமேடு செல்லும் பகுதியில் அமைந்துள்ளது இந்த கடைக்கு செல்ல பொதுமக்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது இது குறித்து கடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் வாக்குகள் சேகரிக்கும் போது வார்டு தேர்தலில் எங்களை வெற்றி பெறச் செய்யும் பட்சத்தில் உடனடியாக நியாய விலை கடை அமைத்து தரப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது ஆனால் வெற்றி பெற்று சுமார் மூன்று ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில் இதுவரை நியாய விலை கடை அமைக்கப்படாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக வயதான தம்பதியர் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள முதலியார் கோட்டை பகுதிக்கு நடந்து சென்று வாங்கி வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது மேலும் அவ்வாறு செல்லும் பட்சத்தில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வார்டு பொதுமக்களுக்கு முன்னுரிமை தரப்படுவதாகவும் அருகில் உள்ள வார்டு பொதுமக்களுக்கு பாரபட்சம் காட்டுப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறுகின்றனர் ஆகையால் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மூலம் உடனடியாக பேட்டை 1 மற்றும் 2வது வார்டு பகுதிக்கு புதிய நியாயவிலை கடை அல்லது பகுதி நேர நியாய விலைக் கடையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்

You must be logged in to post a comment.