உசிலம்பட்டி வட்டார பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை 153 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி வட்டார பிள்ளைமார் சங்கம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கௌரவத் தலைவர் செல்வராஜ் செயலாளர் வாசு முத்து பொருளாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் சுப்பிரமணி, மணிவண்ணன், பாலசுப்பிரமணி மீசை மணிகண்டன், மார்க்கண்டன், நாகராஜ் மற்றும் பிள்ளைமார் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.