உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி பயணத்தின் 2 ஆம் கட்ட பரப்புரை மேற்கொண்டார்.,
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று முளைபாரி எடுத்தும், மேள தாளத்துடன், வான வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.,
தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.,
இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் பூமி அதிருகிறது., அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டியில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டது, உசிலம்பட்டி எப்போதுமே அதிமுகவின் எஃகு கோட்டை.,
உசிலம்பட்டி விவசாயிகள் நிறைந்த தொகுதி, உங்களிடம் நானும் ஒரு விவசாயி பேசிகின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.,
விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்., அம்மா இருந்த போது தான் முதன் முதலாக உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது., அதிமுக ஆட்சி வந்த பின் 58 கால்வாயில் தண்ணீர் நிரந்தரமாக திறக்கப்படும்., அதோடு வைகை அணையை தூர்வாருவோம், நீர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி உசிலம்பட்டி மக்கள் எப்போதும் விவசாயம் செய்யும் வகையில் ஏற்படுத்தி தருவோம்.,
காவேரி மேலாண்மை திட்டத்தை போல வைகை அணையை தூர்வாரும் திட்டத்தையும் வைத்திருந்தோம்., ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது.,
அன்று இந்திய அளவில் உணவு தானிய உற்பத்தியை அதிகரித்து தேசிய அளவில் விருதுகளை பெற்று தந்தது அதிமுக அரசு.,
85 சதவீதம் ஏழைகளுக்கு வீடு, தாழிக்கு தங்கம் 12 லட்சம் பேருக்கு என நிதியை கொடுத்தது., அதிமுக ஆட்சி மலர்ந்த உடன் திருமண உதவி திட்டம், தாழிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடரும்.,
ஒவ்வொரு திபாவளிக்கும் தாய்மார்களுக்கு பட்டுசேலை கொடுக்கப்படும்.,
ஏழைகளுக்கு வயிறாற உணவு அளிக்கும் திட்டமான அம்மா உணவகத்தில் நல்ல உணவு கிடைக்கவில்லை, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் அம்மா உணவகத்தில் பணியாளர்களை நியமித்து நல்ல உணவு வழங்கப்படும்.,
மீண்டும் அம்மா கிளினிக் திறக்கப்படும்., ஏழை எளிய மாணவர்கள் திறமையான மாணவர்களாக உருவாக்கும் அம்மா மடிகனினி வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.,
67 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள், மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என சொன்னார்கள்., தேர்தல் வந்தால் மட்டும் மக்களை ஏமாற்றி பேசி வாக்குகளை பெற்றுவிடுவார்கள் திமுகவினர்.,
எல்லா துறையிலும் ஊழல், Corruption, Celection, Commission மட்டுமே இந்த ஆட்சியில் நடக்கிறது.,
உங்களுடன் ஸ்டாலின் னு வீடு வீடா வராங்க., நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து 46 பிரச்சனைகள் மட்டுமே இருப்பதாக கண்டு பிடித்துள்ளார்கள்.,
அடுத்த ஆண்டு ஆட்சியை பிடிக்க ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.,
பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம், பி.கே. முக்கையாத்தேவருக்கு சிலை வைத்தது அதிமுக அரசு., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் பி.கே. முக்கையாத்தேவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.,
உசிலம்பட்டியில் புறவழிச்சாலை, உசிலம்பட்டியில் சிப்காட் தொழிச்சாலை, மள்ளப்புரம் மயிலாடும்பாறை சாலையில் போக்குவரத்து வசதி என உசிலம்பட்டி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும்.,
ஸ்டாலின் மாடல் அரசு, Failure மாடல் அரசு, Bye bye Stalin என பேசினார்.,
பேச்சு : எடப்பாடி பழனிச்சாமி ( முன்னாள் முதல்வர் – அதிமுக பொதுச் செயலாளர் )
You must be logged in to post a comment.