அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தின் 4ம் கட்ட பிரச்சாரத்தை மதுரை மாவட்டத்தில் கடந்த 1ந் தேதி தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார் இந்த நிலையில் 4ந் தேதி சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் இந்த நிலையில் மதுரையில் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில்வழக்கறிஞர் குருவித்துறை காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பாரம்பரியமிக்க சோழவந்தான் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர் இதில் தென்கரை நாகமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.