சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டமமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு சீர் மரபினர் நல சங்கத்தினர் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் உள்ள விடுதிகளை சமூக நல விடுதிகள் என்று மாற்றம் செய்ததை கண்டித்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் வழங்க கோரியும் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தவமணி தலைமையில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அகில இந்திய வல்லரசு பார்வர்ட் பிளாக் இளையரசு, பார்வார்ட் பிளாக் ஆர் கே சாமி, ஆனந்தன் மற்றும் தமிழ்நாடு சீர் மரபினர் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.