58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக உள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், அணையில் உள்ள 58 கால்வாய் மதகு பகுதியை 67 அடியில் இருந்து 65 அடியாக குறைத்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் தண்ணீர் திறக்க கோரி சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை அமைச்சர், நீர்வளத்துறை செயலர் வரை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டி.,
விரைவில் தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில், அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு மற்றும் உசிலை 58 கிராம பாசன சங்கத்தின் சார்பில் விவசாயிகளும் இணைந்து உசிலம்பட்டி தேனி ரோட்டிலுள்ள முருகன் கோவில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உசிலை 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள்,ஆண்கள் பெண்கள் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் வலியுறுத்தியும் 58 கிராம கால்வாய் திட்டத்திற்காக நிரந்தர அரசாணையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
You must be logged in to post a comment.