பரவையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்து அரசு பேருந்தில் ஏறி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார் அதிமுக முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜீ
தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுபயணத்தில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மதுரையிலுள்ள 10 தொகுதியிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக அதிமுக கொள்கை வளர்ச்சி, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்த விளம்பர பிரச்சார வாகனத்தை மதுரை பரவை பகுதியில் அதிமுக முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜீ, வளர்மதி ஆகியோர் கொடியைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் அவ்வழியே வந்த அரசு பேருந்தில் ஏறி பொதுமக்களிடம் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியில் பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர் பரவை ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.