சோழவந்தானிலிருந்து தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்துக்கு பேருந்து வராதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு எந்த ஒரு பேருந்தும் வராதால் பொதுமக்கள் பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் முகூர்த்த நாளாகவும் இருந்ததால் சோழவந்தான் திருவேடகம் பச்சம்பத்து தேனூர் ஆகிய பகுதிகளில் அதிக பயணிகள் காத்துக் கிடந்தனர். மேலும் வழிபாட்டு தலங்களுக்கு செல்வோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் சிகிச்சையில் உள்ளவர்களை பார்க்க செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு ஆளாகினர் மேலும் சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாத நிலையில் அதிக அளவில் வெயிலில் காய்ந்து நின்றனர். சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் முறையான திட்டமிடல் இல்லாததால் பேருந்து நிலையத்திற்கு எந்த ஒரு பேருந்தும் வருவதும் இல்லை எந்த ஒரு பேருந்தும் சரியான நேரத்திற்கு எடுப்பதும் கிடையாது குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் மிக குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன மூன்று மணி நேரத்துக்கு மேலாக பெரியார் நிலையத்திற்கும் திருமங்கலத்திற்கும் அடிக்கடி பேருந்து இல்லாமல் பயணிகள் காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது இது குறித்து மதுரை மண்டல மேலாளர் நேரடியாக விசாரணை செய்து சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் உள்ள அனைத்து பேருந்துகளையும் போக்குவரத்து கால அட்டவணையில் உள்ளபடி சரியான நேரத்திற்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பேருந்துகளில் அதிக குறைபாடு இருப்பதால் நடுவழியில் நிற்கும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது அதனையும் சீர் செய்ய வேண்டும் என்று இப்பகுதி பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!