கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவ ஸ்ரீ நாகேஸ்வர சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ விக்னேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் மங்கள இசை உடன் விக்னேஸ்வர பூஜை முதலாம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இரண்டாம் நாள் நிகழ்ச்சி கோபூஜை, வேத பாராயணம், மூல மந்திர ஹோமம் இரண்டாம் கால யாக பூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி மேளதாளத்துடன் திருக்கோவிலை சுற்றி வலம் வந்து அருள்மிகு செல்வ விநாயகருக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. பக்தர்கள் மனம் உருகி வேண்டினர். தொடர்ந்து செல்வ விநாயகருக்கு பால் தயிர் வெண்ணை சந்தனம் பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கீழமாத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.