சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் 63 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 63 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது
இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் காலை திருக்கோஷ்டியூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம அய்யங்கார் தலைமையில் மங்கள இசை உடன் விஷ்வக்சேனர் முதலாம் காலயாக பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்யாவாகனம், வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்பணம், நடைபெற்றது. விமான கலசம் பிரதீஷ்டை நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை மூன்றாம் நாள் யாகசாலை பூஜை நடைபெற்று மகா கும்பாபிஷேகம் சரியாக காலை 9 மணிக்கு நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது பின்னர் ஐயாயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி கே கோபாலன், கோவில் நிர்வாக அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி,தென்கரை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திகை செல்வி, சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், கோபுர கலசம் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் முள்ளிபள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜா, முன்னாள் தலைவர் லட்சுமி மார்நாட்டாண், மாவட்ட விவசாய பிரிவு வக்கீல் முருகன் தொழிலதிபர் ஜீவ பாரதி துணைத் தலைவர் லதா கண்ணன் பேட்டை பெரியசாமி வார்டு கவுன்சிலர் கொத்தாளம் செந்தில், இளைஞர் அணி வெற்றிச்செல்வன், மன்னாடிமங்கலம் திருமுருகன் ,உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் முள்ளிபள்ளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.