மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள ஆர்.சி.சிறுமலர் தொடக்கப் பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி…
உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர் எஸ்.ஒ. ஆர்.தங்கப்பாண்டியன், முன்னிலையில்,
ஆர்.சி.பள்ளி தலைமை ஆசிரியர், சகாய மரிய ரட்சியம், பள்ளி தாளாளர், மரிய ரோஜாமணி, இல்ல தலைவி,சூசையம்மாள் அவர்களின் ஏற்பாட்டில்.
உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற தலைவர், தேன்மொழி, சுகாதார ஆய்வாளர், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நகர மன்ற கவுன்சிலர்கள் வீரமணி, முருகன், காத்தம்மாள், நாகஜோதி, பிரியா, சந்தனம், பிரகதீஸ்வரன் மற்றும் திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர், குபேந்திரன்,கல்யாணி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், பிரவீன்நாத், நகர தகவல் தொழில்நுட்ப அணி கேசவன், நித்திஷ், ரஞ்சித், பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் 6 பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கப் பட்டது
You must be logged in to post a comment.