அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக – உசிலம்பட்டியில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மழலைகள் தபால் அட்டையில் நன்றி மடல் அனுப்பி வைத்தனர்.,

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அரசு பள்ளிகளில் துவங்கப்பட்ட காலை உணவு திட்டத்திற்கு பெரும் வரவேற்பு உருவான சூழலில், இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த காலை உணவு திட்டத்தை முதல்வர் விரிவாக்கம் செய்தார்.,
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் பயிலும் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், காலை உணவை உண்ட கையோடு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தபால் அட்டையில் தங்கள் கைகளாலேயே எழுதி நன்றி மடல்களை முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.,
இதில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 100 க்கும் மேற்பட்ட மழலைகள் *”காலை உணவு திட்டம் தந்தமைக்கு நன்றி தாத்தா”* என எழுதி தபால் அட்டை அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.,
மேலும் 350 மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்திலேயே THANK YOU CM என எழுத்து வடிவில் அமர்ந்து நன்றி தெரிவித்தனர்.,
திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நாளில் பள்ளி மழலைகள் முதல்ருக்கு நன்றி தெரிவித்து நன்றி மடல் மற்றும் எழுத்து வடிவில் அமர்ந்து நன்றியை வெளிப்படுத்தியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.,
You must be logged in to post a comment.