மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ராஜா வயது (37). இவரது உறவினர் ஒருவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த சில மாதங்கள் முன்பு கட்டாய காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் அந்த நபர் மீது போக்சோ வழக்கின் கீழும் ராஜா மற்றும் அவரது மனைவி மீது ஆள் கடத்தல் பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் இன்று திடீரென ஆட்டோ ஓட்டுனரான ராஜா வாடிப்பட்டி பேருந்து நிலைய நுழைவு வாயில் மீது ஏறி பெட்ரோல் கேனுடன் தன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் ஆனால் வாலிபர் நுழைவுவாயிலிலிருந்து இறங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்
பின்னர் வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினரும் போலீசாரும் மற்றும் அந்த நபரின் நண்பர்களும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
இருப்பினும் அந்த நபர் நுழைவு வாயில் மேலிருந்து கீழே இறங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்
You must be logged in to post a comment.