மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு அக்ரஹாரம் பகுதியில் கிருஷ்ணன் கோயில் ஆஞ்சநேயர் கோவில் சனீஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மத்தியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சிதலமடைந்த நிலையில் பக்கவாட்டு சுவர்களில் கீறல் விழுந்தும் தொட்டியின் மேல் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தும்
இருப்பதால் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் தண்ணீர் தேங்கும் மேல் புற சுவர்கள் பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது இந்த நிலையில் தொட்டியின் மேல் புறமுள்ள சுவர்கள் பெயர்ந்து கீழே விழுந்ததில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடி உடைந்து காருக்கு பலத்த சேதம் அடைந்தது மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதி மற்றும் அருகில் 50 மீட்டர் தொலைவில் முக்கியமான மூன்று கோவில்கள் கிருஷ்ணன் கோவில் ஆஞ்சநேயர் கோவில் சனீஸ்வரன் ஆகிய கோவில்கள் உள்ள நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக இந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் மேலும் அருகில் 200 மீட்டர் தொலைவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து வந்து பயின்று வருகின்றனர் குறிப்பாக கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் பகுதிகளில் இருந்து வரும் மாணவிகள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர் இவர்களுக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது ஆகையால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது தொட்டியை முழுவதுமாக பராமரிப்பு பணி செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இதுகுறித்து எட்டாவது வார்டு கவுன்சிலிடமும் பேரூராட்சி அலுவலகத்திலும் முறையாக மனு அளிக்கப் போவதாகவும் கூறினர்

You must be logged in to post a comment.