திமுகவில் இணையப் போவது ஒபிஎஸா ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ.உசிலம்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் வைத்த ப்ளக்ஸால் பொதுமக்கள் குழப்பம.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அஇஅதிமுக 4 அணிகளாக செயல்பட்டு வருகின்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக மீட்புக் குழு என தணி அணியாகி பா.ஜவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்ததால் மீண்டும்; தனித்து விடப்பட்ட நிலையில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.இதனால் ஒபிஎஸ் திமுகவில் இணைகிறார் எனப் பேசப்பட்டது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்தில் ரூ5 கோடி 50லட்சம் மதிப்பீட்டில் எம்எல்ஏ கோரிக்கைப்படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் திறந்து வைத்தார்.முன்னதாக அரிசிக்குடோன் வாசல் அருகே முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ சார்பில் நன்றி தெரிவித்து பளக்ஸ் பேணர்கள் வைக்கப்பட்டிருந்தன.அதில் எமஎல்ஏ சார்பில் வைக்கப்பட்ட பேனரில் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் படத்துடன் நன்றி தெரிவித்து எம்எல்ஏ அய்யப்பன் படத்துடன் அவரது ஆதரவு நிர்வாகிகள் படமும் இடம் பெற்றிருந்தது.அதிமுக தலைவர்கள் யார் படமும் இடம் பெறவில்லை. ஏற்கனவே ஒபிஎஸ் ஸ்டாலினை சந்தித்த நிலையில் அவரும் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணையப் போகின்றரா அல்லது உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் அதிமுகவில் இணையப் போகின்றாரா என பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.