தமிழக வெற்றிக்கழக சார்பில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்ற நிலையில் மாநாட்டிற்கு வந்த நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயதான
ரோஷன் இவர் குன்னூர் தொகுதி தமிழக வெற்றி கழக இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் . என்பவருடன் TN02AX2005 என்ற காரில் மதுரை மாநாட்டிற்கு வந்தபோது இன்று மதியம் 3 40 மணியளவில் மயக்கம் ஏற்பட்டு மாநாட்டு மருத்துவ முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று ஊருக்கு திரும்பும் போது சமயநல்லூர் பைபாஸ் அருகே வந்தபோது
மயங்கியவரை சமயநல்லூர் அருகே பரவை ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு என்று இரவு 7.30 மணிக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதித்த போது வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிகிறது இதனை அடுத்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு
உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

You must be logged in to post a comment.