மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளான மேலக்கால் திருவேடகம் சோழவந்தான் பசும்பொன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் திடீரென மழை பெய்ததால் மின்சாரம் முன்னறிவிப்பின்றி திடீரென துண்டிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகல் முழுவதும் வெயில் சுமார் 104 டிகிரிக்கு மேல் வாட்டி வதக்கிய நிலையில் இரவு 8 மணிக்கு மேல் திடீரென கரு மேகங்கள்சூழ்ந்து பலத்த மழை கொட்டியது இதனால் சோழவந்தான் சுற்றுப்பகுதிகளான மேலக்கால் திருவேடகம் தச்சம்பத்து சோழவந்தான் பசும்பொன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் வயது முதிர்ந்தோர் குழந்தைகளை வைத்திருப்போர் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகினர் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பாக தென்மேற்கு பருவமழையின் விளிம்பு நிலையில் இந்த நிலை ஏற்பட்டு வருவதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
மின்சார வாரியம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் தடை படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிவிரைவாக எடுக்க வேண்டும் என்று
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் கடந்த காலங்களில் தீவிர மழை பெய்யும் போது ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.