மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு
சிமநாதபுரத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பில்கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த வெங்கடேசன் எம் எல் ஏ தொடர்ந்து இதுபோன்று பொதுமக்களின் கோரிக்கைகள் முதல்வர் மற்றும் மாவட்ட அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றி வருவதாக வருவதாக கூறினார் அப்போது அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதிக்கு மகளிர் இலவச பேருந்து வருவதில்லை எனவும் ஒரே ஒரு பேருந்து காலை மற்றும் மாலை என இரு வேலை மட்டும் வருவதாகவும் அதுவும் காசு கொடுத்து செல்ல வேண்டிய பேருந்தாக இருப்பதால் 100 நாள் பணிகளுக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு செல்ல வேண்டிய பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலைகளுக்கு வெளியூர் செல்ல வேண்டிய பெண்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் ஆகையால் கச்சிராயிருப்பு கிராமத்திற்கு மகளிர் இலவச பேருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் தமிழக முதல்வர் அவர்கள் மகளிர் இலவச பேருந்தால் வருடத்திற்கு பெண்கள் சேமிப்பு தொகையை குறிப்பிட்டு நிகழ்ச்சிகளில் பேசி வரும் நிலையில் எங்கள் கிராமத்திற்கு மகளிர் இலவச பேருந்து இல்லாததால் பெண்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை பேருந்துக்காக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாகவும் இதனால் போதிய வருவாய் இன்றி மிகவும் சிரமப்படுவதாக வெங்கடேசன் எம் எல் ஏ விடம் கூறினர் உடனடியாக இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார் மேலும் பொதுமக்கள் பட்டா மகளிர் உரிமை தொகை ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கையாக கொடுத்தனர் அனைத்திற்கும் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார் அருகில் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணவேணி லட்சுமி காந்தம் மேலக்கால் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி பி ஆர் சி ராஜா கிளைச் செயலாளர்கள் மேலக் கால் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்

You must be logged in to post a comment.