மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சி வடகாடுப்பட்டி கிராமத்தில் வனபகுதிக்கு உரிய பகுதியில் தார் சாலை அமைக்க சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார் இந்த பகுதியில் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி முதல் சுமார் 200 மீட்டர் தூரமுள்ள வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் சாலை அமைக்க கோரி இந்த பகுதி பொதுமக்கள் சுதந்திரம் அடைந்த நாள் முதல் சுமார் 75 ஆண்டுகளாக போராடி வந்தனர் இந்த நிலையில் கடந்த ஆண்டு வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் இந்தப் பகுதியை நேரில் பார்வையிட்டு விரைவில் தார் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்து சென்றார் அதன் பிறகும் ஒரு ஆண்டுக்கு மேலாக பணிகள் தொடங்கப்படாத நிலையில் தற்போது சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது இதனை தொடர்ந்து தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பட்டி கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை என கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கூறிவந்த நிலையில் அவர்களுக்காக சுமார் 9 லட்சம் மதிப்பில் நாராயணபுரம் ஊத்து அருகில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு சிவன்நாதபுரம் பகுதி மக்கள் நியாய விலை கடை கேட்டு கோரிக்கை வைத்திருந்த நிலையில் சுமார் 13 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிகளில் வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணவேணி லட்சுமி காந்தம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் விவசாய அணி வக்கீல் முருகன் சி பி ஆர் சரவணன் துணைத் தலைவர்கள் லதா கண்ணன் வாடிப்பட்டி கார்த்திக் பேட்டை பெரியசாமி இளைஞரணி வெற்றிச்செல்வன் ஊத்துக்குளி ராஜா முள்ளிபள்ளம் கேபிள் ராஜா மகளிர் அணி சசிகலா சக்கரவர்த்தி குருவித்துறை தமிழ்முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊத்துக்குளி விக்னேஷ் சின்னமணி பி ஆர் சி ராஜா ஊராட்சி செயலாளர்கள் மேலக் கால் விக்னேஷ் காடுப்பட்டி ஓய்யனன் தென்கரை முனிராஜ் இரும்பாடி திலீபன் கச்சிராயிருப்பு பாஸ்கரன் விக்கிரமங்கலம் சங்கீதா மற்றும் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்

You must be logged in to post a comment.