உசிலம்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.மாரிபட்டி கிராமத்தில் காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தினர், கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.,
இந்த ஆக்கிரமிப்பு காரணமாக கோவிலுக்கு செல்ல பாதை இல்லை என இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.,
இந்த கோரிக்கையின் அடிப்படையிலும், நீதிமன்ற உத்தரவின் பேரிலும் இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற எந்த அதிகாரிகளும் கிராமத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.,
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்., தொடர்ந்து உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.,
இந்த தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன், சாலை மறியல் செய்ய யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது, என பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.,
இதில் டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் போலீசார் பெண்களை நாக்கை திருத்தியும், கைகளை முறுக்கியும் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை உருவானது.,
விரைந்து வந்த உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளித்தை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.,
அடுத்தடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது உசிலம்பட்டியின் பரபரப்பை உருவாக்கியுள்ளது.,
You must be logged in to post a comment.