நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.எங்களுக்கு ஒரே நெருடல் என்ன வென்றால் வருகிற சட்டசபை தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுகிறாரே?என்பதுதான் எங்களுக்கு ஒரே நெருடல்? -செல்லூர் ராஜு

மதுரை துவரிமானில், ஆர் ஜே தமிழ்மணி டிரஸ்ட் மூலம் கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை நடத்தியது, திமுக்காவினருக்கு கலக்கமாகத்தான் உள்ளது,மடியில் கனமில்லை எனில், வழியில் என்ன பயம்

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது திமுகவினர் மீது, அமலாக்க துறை சோதனை நடத்தியது.அப்போது முன்னாள் முதல்வர் கலைஞர் , காங்கிரஸ் கட்சியுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று கூறினார்.

ஆனால் , அதன் பின் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.எனவே எங்கள் பொதுச் செயலாளரை பார்த்து, அமலாக்கதுறை சோதனைக்கு பயந்து பாஜக கூட்டணிக்கு போயிட்டாருன்னு பேசுவது ஏற்புடையது அல்ல.

அதிமுகவின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா எங்கள் தலைவர்களை பற்றியும், அவர்கள் சார்ந்து இருந்த சமுதாயம் பற்றியும், விசிக திருமாவளவன் பேசியது ஏன் என்று தெரியவில்லைதிமுக கூட்டணி கட்சியின் நெருக்கடியா. இல்லை வேற எதுவும் பிரச்சனையா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.இதற்காக திராவிட கழக தலைவர் வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அவரைப் புகழ்ந்து பேசி உள்ளனர்.

ஆனால் சமீபத்தில் ,விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு பேசியது ஏன் என்று தெரியவில்லை.அவருக்கு ஏதும் ஆகிவிட்டதா எனவும் தெரியவில்லை.

நடிகர் விஜயின் , தவெகா வால் அதிமுகவுக்கு பாதிப்பா என்ற கேள்விக்கு?

நடிகர் கமல்ஹாசன் மன்னர் ஆட்சியை ஒழிப்பேன் ஊழலை ஒழிப்பேன் என்று டார்ச் லைட்டை தூக்கி எறிந்தவர் இன்று தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றி விட்டு திமுகவுடன் கைகோர்த்து விட்டார்

நடிகர்கள்சிவாஜி கணேசன், பாக்கியராஜ் சரத்குமார் உள்ளிட்ட பலர் கட்சி ஆரம்பித்து என்ன ஆனது?எனவே நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது

*எங்களுக்கு ஒரே நெருடல் என்ன வென்றால். வருகிற சட்டசபை தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுகிறாரே? என்பதுதான் எங்களுக்கு ஒரே நெருடல்?

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை அருகே உள்ள. துவரிமானில் பேட்டியளித்தார் .

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!