.
உசிலம்பட்டி பேரவை அரங்கில் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி சத்திரிய குல நாடார்கள் உறவின் முறை கல்வி திருவிழாவில் மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
காமராஜர் 123 வது பிறந்தநாள் விழாவை கல்வி திருவிழாவாக உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி சத்திரிய நாடார்கள் உறவின் முறை சார்பில் ஏழை எளிய 108 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் உறவின் முறை தலைவர் டி.ஆர்.எஸ்.ஜி. மாணிக்க நாதன் தலைமையில் காரியதரிசி டி.பி.பி.டி பாஸ்கரன், பொருளாளர் கே.வி.கே.டி.ஆர். துரை அரசு, உபதலைவர்கள் வி.ஏ.கே.எல்.எஸ். கலைச் செல்வன், பெரீஸ பி. பாலசுப்பிரமணியம் இணைச் செயலாளர்கள் எம் .கே.பி. லெட்சுமணன், டி.பி.டி.டி. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கே. ஏ. பி . ஜெயராம், டாக்டர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். நிர்வாக குழு உறுப்பினர்கள் டி. ஆர். எஸ். பி. சுவாமி நாகராஜன், எல் விஜயகாந்தன், டி. ஆர். எம். எஸ். ஆர். எஸ். மணிகண்டன்,டி கே. எம் . பி. தேவதாஸ் மற்றும் உறவின்முறை நிர்வாக குழு உறுப்பினர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ரூபாய். 3 லட்சத்தி 30 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
You must be logged in to post a comment.