மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்திற்கு மதுரை எல்லீஸ் நகர் கிளை பணிமனையின் மூலம் வண்டி எண் TN-58 = N 2038, தடம் எண் – 70, பெரியார் நிலையம் முதல் அலங்காநல்லூர் வழியாக பெரிய இலந்தை குளம் வரை இயங்கும் அரசு பேருந்தானது கடந்த 14 தேதி முதல் கிராமத்தில் இரவு நேர நிறுத்தம் (Halt) பேருந்தாக மாற்றி உள்ளதாகவும் தற்போதைய கால அட்டவணையின் படி காலை முதல் மதியம் வரையிலான நேரத்தில் பெரிய இலந்தை குளத்தில் இருந்து புறப்படும் நேரம் 20 நிமிடங்கள் முன்னதாக உள்ளதாகவும். எனவே காலை 6.15, 8.30, 10.40, பகல் 12.50 புறப்படும் என்றும், அதுபோல மதியம் முதல் இரவு நேரத்தில் 25 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் பேருந்தினை மதியம் 2.10, மாலை 4.15, 6.35, மற்றும் இரவு 9.00 ஆக மாற்றி தரும் படி கேட்டு போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் ஏனெனில் இதே வழித்தடத்தில் இந்த நேரத்தில் (மதியம் 2.50) மற்றும் இரவு 7.30 மணி மற்றும் 10.00 மணிக்கு (halt) 70 A, தாதகவுண்டன்பட்டி என இரண்டு பேருந்தும் 10 நிமிடங்கள் இடைவெளியில் புறப்படுவதால் பயனில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர் மேலும் மதுரைக்கு வேலைக்கு சென்று ஊர் திரும்பும் அ.புதுப்பட்டி, அழகாபுரி, குட்டி மேய்க்கன் பட்டி, கீழக்கரை, கோவிலூர், பெரிய இலந்தை குளம் போன்ற கிராம மக்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே மேற்கண்டவாறு பேருந்து கால அட்டவணையை மாற்றி அறிவிப்பு வெளியிடுமாறு பொதுமக்கள் சார்பில் போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

You must be logged in to post a comment.