மதுரை மாவட்;டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கிராமம்.இக்கிராமத்தில் 1000க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராம தற்காலிக எழுத்தராக (கிளர்க்) சுகந்தி என்பவர் பணியாற்றி வருகின்றார்.இவர் இக்கிராம மக்களிடம் 100 வேலைத்திட்டம் வேண்டுமென்றால் தண்ணீர் வரி கட்டவேண்டுமென்றும் அவ்வாறு ரூ.200 கட்டுபவர்களுக்கே 100 நாள் வேலைத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்வதாகக் கூறப்படுகின்றது.இது தொடர்பாக சிலர் கிளர்க்கை அலுவலகத்தில் முற்றுகையிடடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.இதுகுறித்து பாண்டியன் என்பவர் கூறுகையில் அப்பாவி மக்களின் அறியாத்தனத்தை பயன்படுத்தி கிளர்க் கட்டாய பணவசூலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.இதுபற்றி கிளர்க் சுகந்தியிடம் கேட்ட போது பகலில் கிராம மக்களை வீடுகளில் சந்திக் முடியாததால் அவர்கள் கூடும் இடங்களில் சந்தித்து தண்ணீர் கட்ட வலியுறுத்திகின்றோம்.ஒருசிலரைத் தவிர பெரும்பாலோனோர் கட்டி வருகின்றனர்.யாரையும் மிரட்டவில்லை.100 நாள் வேலையென்பது சுழற்ச்சி முறையில் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது எனக் கூறினார்.

You must be logged in to post a comment.