மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
சென்னையில் போரட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் 15 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் , அவர்கள் வேறு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் போது புதிய பணியாளர்களாகவே கணக்கில் கொள்ளப்படும் சம்பளம் குறைந்துவிடும். அதனால்தான் அவர்களது அடிப்படை உரிமைகளை கேட்டு போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க அரசு நினைக்க கூடாது.
13 நாள் சென்னையில் போராடி வருகின்றனர் அந்த போராட்டத்தை அரசு முடக்க நினைக்காமல் அக்கறையுடன் அவர்களது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து.
சாதி ஆணவ படுகொலை பல்வேறு சமுதாயங்களில் நடைபெறுகிறது குறிப்பிட்ட சமுதாயத்தில் அதிகம் ஆணவ படுகொலை நடக்கிறது.
ஆணவ கொலை பற்றி தனிச்சட்டம் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என முதன் முதலில் கூறியது நான்தான்
ஆணவ கொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்கும் தகுந்த சட்டம் இயற்ற வேண்டும்.
புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநிலமாநாடு டிசம்பரில் நடைபெற உள்ளது. அதில் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அதன் பிறகு தான் எங்களது நிலைப்பாடை தெரிவிப்போம்.
இன்னும் தேர்தலுக்கு 8 மாத காலம் உள்ளது.
தமிழகத்தின் நலன் புதிய தமிழகம் கட்சியின் நலன் சார்ந்தும் எங்களது கோரிக்கைகளை ஏற்று தீர்க்க வரும் கட்சியோடு தான் ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு என்ற அடிப்படையில் முன்னுரிமை தரும் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைப்போம்.
வெறுமனே கூட்டணி வைக்க மாட்டோம் ஆட்சி அதிகார பகிர்வு இருந்தால் மட்டுமே கூட்டணி அதில் உறுதியாக உள்ளோம்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க முடியாது.
தமிழக மக்கள் ஆட்சி குறித்து விரக்தியில் தான் உள்ளனர்.
எந்த தரப்பிலும் திருப்தி இல்லை என்ற மனநிலையில் தான் திமுக ஆட்சி உள்ளது.
சென்னையில் வசிக்கும் துப்பரவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத அரசு தமிழகத்தில் பொது மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் எப்படி நிறைவேற்ற போகிறது.
ஜனநாயகத்தின் தூணாக இருப்பது தேர்தல் அதில் நேர்மை இருக்க வேண்டும்.
நேர்மையாக தேர்தல் நடத்தினால் ஜனநாயகம் காக்கப்படும். முறைகேடு செய்தால் ஜனநாயகம் அற்று போய்விடும்.
வாக்காளர் சேர்ப்பில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கனும், போலி வாக்காளர்கள் இருக்க கூடாது.
18 வயது வந்த அனைவரையும் வாக்காளர்களாக சேர்த்து இருக்க வேண்டும் அதே நேரம் போலியாக ஒரே ஆளுக்கு 2 , 3 முறை போலியான பெயர்களில் வாக்களிக்கும் உரிமையையும் வழங்க அனுமதிக்க கூடாது.
எதிர்கட்சி காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அது நிருபணம் செய்யப்பட்டால் மிகப்பெரிய தவறுதான்.
ஜனநாயகத்தில் போலி வாக்காளர்கள் சேர்க்க இடமளிக்கவே கூடாது.
2026 தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு பகுதியில் வேட்பாளர்கள் போட்டியிடுவோம்.
சோழவந்தான் தொகுதியில் நிச்சயமாக 99.9. சதவீதம் புதியதமிழகம் கட்சி கண்டிப்பாக போட்டியிடும். புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதியாக மாறும்.
கூலி திரைப்படம் குறித்த கேள்விக்கு:
ஏழை, எளிய கூலித்தொழிலாளர்களின் நலன் குறித்து அவர்களது வாழ்வாதாரம் குறித்து கவலை படுகிறேன்.
கூலி என்ற பெயரில் பணக்காரர்களாக இருப்பவர்கள் பற்றி கவலை பட மாட்டேன் என பேசினார்.
இந்த மாவட்டத்தின் அமைச்சர் மூர்த்தி ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து உள்ளார் அந்த பணத்தை வைத்து வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க முயற்சிப்பார் அதை தடுக்க வேண்டும் இவ்வாறு பேசினார்
You must be logged in to post a comment.