மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல் பயிர்கள் அழுகும் நிலைக்கு சென்றுள்ளது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்ப நகர் மீனாட்சி நகர் ஆலங்கொட்டாரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி செய்யாத நிலையில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இதனால் மூன்று மாதங்களாக நெல்லை பாதுகாத்து அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் இந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் வயலுக்குள் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்றி நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் விரிவாக்கப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் ஆகையால் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் சோழவந்தானின் அனைத்து பகுதிகளிலும் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் மற்றும் விரிவாக்க பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சேதமடைந்த நெற்ப்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
You must be logged in to post a comment.