சோழவந்தான் பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகளால் பயணிகள் பொதுமக்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் செக்கானூரணி பணிமனையில் இருந்து இயக்கப்படும் நிலக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் கல்லூரி செல்லும் பேருந்து நிலக்கோட்டையில் இருந்து வரும் பொழுது தென்கரை பாலத்தில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வராமல் நேரடியாக மாரியம்மன் கோவில் வழியாக திருமங்கலம் செல்வதால் இந்த பேருந்துக்காக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது

இதனால் சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்த பகுதியில் காத்திருக்கும் பயணிகள் வெகு நேரமாக காத்திருந்து பேருந்து வராத காரணத்தினால் தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் பணம் செலுத்தி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது..

ஏற்கனவே சோழவந்தான் பேருந்து நிலையம் முழு பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் வாடிப்பட்டியில் இருந்து திருமங்கலம் செல்வதற்காக சோழவந்தான் பேருந்தில் வரும் பயணிகள் தபால் நிலையம் அருகில் இறக்கி விடப்படுகின்றனர் அவர்கள் திருமங்கலம் செல்வதற்கு சோழவந்தான் பேருந்து நிலையம் செல்ல வேண்டுமா அல்லது வட்ட பிள்ளையார் கோவில் செல்ல வேண்டுமா என்ற குழப்பத்தில் நீண்ட தூரம் நடந்து பேருந்து நிலையம் செல்கிறார்கள் பின் நிலக்கோட்டையில் இருந்து வரும் திருமங்கலம் செல்லும் பேருந்து இங்கே வராது.. மருது மகால் பேருந்து நிறுத்தம் தான் செல்ல வேண்டுமென பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் மற்ற பயணிகள் கூறிய பின்பு அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது

மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து என்பதால் பேருந்து நிலையம் மற்றும் வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் புறக்கணிக்கப்படுகிறதா..? என்ற கேள்வி பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது

மாட்டுத்தாவணி மற்றும் திருமங்கலம் போன்ற பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் பேருந்து நிலையமாக சோழவந்தான் பேருந்து நிலையம் உள்ளது இந்த நிலையில் திருமங்கலம் செல்லும் பேருந்தும் பேருந்து நிலையத்தை புறக்கணித்தால் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையம் விரைவில் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.. சோழவந்தான் பேருந்து நிலையத்தில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன.. சோழவந்தான் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு பயன்படும் வகையில் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகளை மட்டும் அட்டவணைபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!