உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் – 20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2 வது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.,
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் மாநாடு குறித்து மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் தனி அறையில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.,
மாநாடுக்கான ஏற்பாடுகள், தொண்டர்களை அழைத்து வருவதுடன், மீண்டும் அவர்களை பத்திரமாக அழைத்து செல்வது வரை மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது., ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் எத்தனை தொண்டர்களை அழைத்து வருவது, எத்தனை வாகனங்களில் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.,
You must be logged in to post a comment.