உசிலம்பட்டி அருகே பிரபல நடிகர் சௌந்திரராஜா வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 9ஆவது ஆண்டை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கி ஊக்கப்படுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் நடிகர் சௌந்திரராஜா, சசிக்குமாரின் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி விஜய், கார்த்தி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் துணை நடிகராகவும், வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபலமான இவர்., நடிகர் விவேக் போன்று மரங்களை நட்டு வைத்து பராமரிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.,
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பிறந்த நாளன்று மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற அறக்கட்டளையை துவங்கி அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வைத்துள்ளார்.,
இந்த அறக்கட்டளையின் 9 வது ஆண்டான இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தியாகராஜன் தலைமையிலான நிர்வாகிகள் மாணவ மாணவிகளுக்கு மரங்களின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,
தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு 100 க்கும் அதிகமான மரக்கன்றுகளை வழங்கியதோடு, மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வரும் மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பாராட்டி ஊக்கப்கடுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளைப் பெற்றது.,
You must be logged in to post a comment.