
விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தகர் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்கும் 58 கால்வாய் திட்டத்திற்கு சோதனை அடிப்படையில் மட்டுமே வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது., வைகை அணையில் உள்ள 58 கால்வாய் மதகு பகுதியை 67 அடியிலிருந்து 65 அடியாக குறைத்து இந்த 58 கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்., இந்நிலையில் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 8.8.25 அன்று 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அதிமுக,அமமுக,பாஜ,தவெக,நாம் தமிழர் உள்பட எதிர் கட்சிகளும் சில தன்னார்வ அமைப்புகளும் இணைந்து வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீரை திறக்க கோரி சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டனர். இருந்த போதும் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையில், இதன் அடுத்த கட்டமாக இன்று உசிலம்பட்டி வைகை அணையில் இருந்து 58 நீர் பாசன கால்வாயில் தண்ணீரை திறக்க கோரி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜவகர் ஏற்பாட்டில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் உசிலம்பட்டியின் முக்கிய பகுதிகளலான நகைக்கடை பஜார், வண்டிப்பேட்டை, ஜவுளிக்கடை பஜார், மார்க்கெட் பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் உசிலம்பட்டி பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் 58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க கோரியும், 58 கிராம பாசன கால்வாயை நீர்ப்பாசன கால்வாயாக மாற்ற கோரியும் , உசிலம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைக்க கோரியும், உசிலம்பட்டி பகுதி விவசாயிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வன பாதுகாப்பு சட்டம் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் போராட்டம் நடைபெறுவதாக விவசாய சங்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.