மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு காலனி பகுதியில் குடியிருக்கும் முத்துக்குமார் அழகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் காலனி மேட்டு தெருவில் குடியிருந்து வருகின்றனர் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று இரவு வீட்டில் மேற் கூரை சரிந்து வீட்டிற்குள் விழுந்ததில் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் மழை பெய்த போது சடசடவென்று சத்தம் கேட்ட நிலையில் வீட்டிற்குள் படுத்திருந்த அனைவரும் சுதாரித்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி அருகில் சென்றதால் உயிர் தப்பியதாக கூறினர் மேலும் அரசு தங்களுக்கு வீடு ஒதுக்கி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் கூலி வேலை செய்யும் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் சிரமமான நிலையில் இருப்பதாலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் ஆகியோர்களை வைத்து தற்போது வாடகை வீட்டில் தங்கி இருப்பதாகவும் ஆகையால் வறுமை நிலையில் உள்ள தங்களுக்கு உடனடியாக அரசு வீடு ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.