மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆடி 18 அன்று வழிபாடு செய்த பின் நீரேத்தான் அகிலாண்டேஸ்வரி ஓந்தாய் அம்மன், அங்காள பரமேஸ்வரி வாலகுருசாமி, மற்றும் மேட்டு நீரேத்தான் அங்காள பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றனர். அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன் மேட்டு நீரேத்தான் வாடிப்பட்டி சாலையில் பர்னிச்சர் கடையில் இரவு காவலாளியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த முக மூடி அணிந்த மர்ம நபர்கள் ரூ.7, 100 பறித்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு கச்சைகட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சமயநல்லூர் பகுதியில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த 4 மர்ம நபர்கள் அய்யங்கோட் டை அருகே சரவணன் மோட்டார் சைக்கிளை வழிமறித் து செல்போன் மற்றும் ரூ.820 பறித்துச் சென்றனர்.
போலீசாருக்கு சவால் விடும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் நடந்து வரும் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே நீரேத்தான் மேட்டு
நீரேத்தான் வயல்வெளிச்சாலை யில் இரவு நேரங்களில் போதை ஆசாமிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றும்
சமயநல்லூர் பாலத்தில் இருந்து பாண்டியராஜபுரம் வரை நான்கு வழி சாலை மற்றும் நகர்ப்புற சாலை பகுதியிலும் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.