மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர்கள் பயின்று வருகின்றனர்,இக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறது,கடந்த ஒரு மாதத்திற்குள் பல விபத்துகள் நடந்து விட்டன,கடந்த வாரம் நடந்த விபத்தில் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் உயிர் இழந்துவிட்டார்,இக்கல்லூரி வாசல் முன்பு வேகத்தடை அமைத்து வேகமாக வரும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி தடுப்புகளை வைத்து இனிவரும் காலங்களில் சாலை விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரினிடம் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும்,வழக்கறிஞருமான இளமகிழன் மனு அளித்தார்,இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல் துணை கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.
You must be logged in to post a comment.