மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சமுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி செருவம்மாள் வயது 65 கணவனை இழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் உடன் தச்சம்பத்து கிராமத்தில் குடியிருந்து வருகிறார் இந்த நிலையில் சோழவந்தான் சங்கங் கோட்டை கிராமத்தில் உள்ள இவரது சகோதரர் சங்கிலி வீட்டில் அவ்வப்போது தங்கி வந்துள்ளார் இந்த நிலையில் சங்கிலியின் வயல்காட்டில் கதிர் அறுப்பு நடைபெற்று உள்ளது இதற்காக வயல்காட்டிற்கு சென்ற செருவமாள் அங்கு கதிர் அறுப்பு எந்திரம் மூலம் பணியாளர்கள் கதிர் அறுத்து கொண்டிருந்த நிலையில் பின்னால் நின்று கொண்டிருந்த செருவம்மாள் மீது கதிர் அறுப்பு எந்திரம் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிக்கொண்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு செருவம்மாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கதிர் அறுக்கும் எந்திரம் மோதி பெண் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

You must be logged in to post a comment.