சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிபள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடிப்பட்டி
தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் முள்ளிபள்ளம்கிளைக் கழக செயலாளர் கேபிள் ராஜா தலைமை வகித்தார் மாவட்ட மகளிர் அணி சந்தான லட்சுமி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். அவைத் தலைவர் இளங்கோவன் ஒன்றிய பிரதிநிதி காமாட்சி, துணைச் செயலாளர் மார்நாடு ஒன்றிய மகளிர் அணி லீலாவதி, பொருளாளர் ஆனந்த், கல்லாங்காடு கிளை கழக செயலாளர் முருகேசன் ,ஒன்றிய வர்த்தக அணி தெய்வேந்திரன் தொழிலாளர் அணி சுந்தர் ,வண்டிக்கார ராசு மற்றும் திமுகவினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.