மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை மற்றும் மன்னாடிமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் பேருந்துகள் வராததால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குருவித்துறைக்கு காலை 6 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வந்து செல்லும்2167 என்ற தடம் கொண்ட மதுரை பி சி பி பேருந்து கடந்த ஒரு வாரமாக வரவில்லை என பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர் இந்த பேருந்து தான் இரவு 10:30 மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு கடைசி பேருந்தாக வந்து செல்லும் மதுரையில் காய்கறி பழ மார்க்கெட் இரவு பணிகளுக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் செல்லக்கூடிய இந்த பேருந்து கடந்த ஒரு வாரமாக வராததால் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் மேலும் இதே பேருந்து காலை 8:30 மணிக்கு குருவித்துறையில் இருந்து புறப்படும் இந்த பேருந்து மன்னாடிமங்கலம் முள்ளிப் பள்ளம் சோழவந்தான் அரசு பெண்களை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக செல்லக்கூடிய இந்த பேருந்து வராததால் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் கல்லூரிக்கு செல்லக் கூடியவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இதே போல் கடந்த இரண்டு நாட்களாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மன்னாடிமங்கலம் வரை வந்து செல்லும் 22 21 என் கொண்ட 68 கிராஸ் சோழவந்தான் போக்குவரத்து பணிமனைக்குரிய பேருந்தும் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதி இந்த பேருந்துகளை மீண்டும் இந்த வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துகள் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.