மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் அருள்மிகு மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 148 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி காப்புக் கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது 30 ஆம் தேதி இளைஞர்கள் மற்றும் மார்நாடு நண்பர்கள் சார்பாக கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது 31 ஆம் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரம் நடைபெற்று அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது 1ம் தேதி தெற்கு தெரு சார்பாக அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இரண்டாம் தேதி கல்லாங்காடு மேட்டு தெரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக அன்னதானம் நடைபெற்றது தொடர்ந்து நேற்று காலை முச்சந்தி அம்மன் நண்பர்கள் சார்பில் 13 ஆம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது ராஜபாண்டி சுரேஷ் ரவிச்சந்திரன் வெள்ளைச்சாமி சிவராமன் சூர்யா சின்னசாமி ஸ்ரீநாத் ஆகியோர் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தனர் நேற்று மாலை 3 மணி அளவில் குச்சனூர் ஜுவராஜ் குழுவினர் சார்பாக நையாண்டி மேளம் நடைபெற்று சக்தி கரகம் வைகை ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்டது மாலை ஆறு மணி அளவில் முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர் ஏழு மணி அளவில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர் திருவிழா ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தன

You must be logged in to post a comment.