பள்ளி வேலை நாளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் பள்ளி குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வைத்த அவலம்

உசிலம்பட்டியில் பள்ளி இயங்கி கொண்டிருக்கும் போதே பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 6,7,8 வது வார்டு பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், கீழப்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.,

இந்நிலையில் இன்று பள்ளி இயங்கும் சூழலில், உங்களுடன் ஸ்டாலின் முகாமும் அதே பள்ளியில் நடைபெற்று வருகிறது., இதன் காரணமாக மாணவ மாணவிகளை அப்பள்ளியின் ஆசிரியர்கள் மரத்தடியில் அமர வைத்து கல்வி கற்ப்பித்தனர்.,

இது குறித்து அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் பூமாராஜா, பணப்பாண்டியம்மாள், பிரகதீஸ்வரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் நிலையில் அரசின் முகாம் நடத்துவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் இளவரசன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய தீர்வு காணுவதாக கூறி அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களை சமாதானம் செய்தனர்.,

இதனிடையே பள்ளி நிர்வாகத்தினர், நகர் மன்ற உறுப்பினர்களுடன் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு முற்றியது, அரசு அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய சூழலில் போராட்டத்தை கைவிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கும் வண்ணம் அரசு நிகழ்ச்சியை நடத்திய அதிகாரிகள் மீதும் அதற்கு இடம் வழங்கிய பள்ளி நிர்வாகம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.,

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!