மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் தனது மனைவி உஷாவுடன் இன்று காலை சோழவந்தான் பகுதியிலிருந்து தனது சொந்த ஊருக்கு மனைவியை அனுப்ப முடிவு செய்து தனது டூவீலரில் கிளம்பினார்.
அப்போது சோழவந்தான் பேட்டை அருகே சென்றபோது அவ்வழியே மதுரையிலிருந்து வத்தலகுண்டு செல்லும் அரசு பேருந்தில் தனது மனைவியை ஏற்றி விட டூவிலரில் அந்த பஸ்சை முந்த முயன்றார்.
அப்போது டூவிலர் நிலைதடுமாறி அதே பேருந்தின் பக்கவாட்டில் மோதி இருவரும் தடுமாறி அதே பேருந்து மீது மோதி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தனர்.
இதில் அவரது மனைவி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவரது கண் முன்னே மனைவி வசந்தி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை கண்ட கணவர் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.