மதுரை மேற்கு மாவட்டம் அ இ பார்வர்ட்பிளாக் கட்சி உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
உசிலம்பட்டி மதுரை மெயின் ரோடு ஜெ.ஜெ நகரில் உள்ள ராசு காளை இல்லத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழாவிற்கு முன்னாள் எம் எல் ஏ., மாநில பொதுச் செயலாளர் பி. வி. கதிரவன் தலைமையில் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பி மணிகண்டன், மாநிலச் செயலாளர்கள் எம். பி. ஆர். பாஸ்கர பாண்டியன், பி .பி. இளையரசு, வழக்கறிஞர்கள் ஆர் திருப்பதி , ரெட் காசிமாயன், மதுரை மாவட்ட தலைவர் ஆதிசேடன் தேனி மாவட்ட செயலாளர் மாயாண்டி மதுரை மாநகர் செயலாளர் சிவ பாண்டி போடி காசிராசன் திருப்பூர் அன்பு ரமேஷ், ஆகியோர் முன்னிலையில் அ.இ. பார்வர்ட் பிளாக் கட்சி மாநிலத் தலைவர் சி. முத்துராமலிங்கம் ,கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ஆச்சி இராஜா நகரச் செயலாளர் சபரி, சௌந்தரபாண்டி, முருகன், செல்லம்பட்டி ஏ. எஸ். ரவி, ஆனந்தன், மதுரை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் கோகுல், வினோத் அரவிந்த் தேனி மனோஜ் மதுரை ஆதவன் மற்றும் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ரதி மலர் மாநில பொருளாளர் மீனா ஒன்றிய செயலாளர் மயிலாம்மாள் உசிலம்பட்டி நகர ஒன்றிய நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.